Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த லாரி…. திம்பம் மலைப்பாதையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…!!

லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் மலை பாதையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திம்பம் மலைப்பாதையின் 12-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்த கரும்புகள் சாலையில் சிதறியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிதறி கிடந்த கரும்புகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு திம்பம் மலை பாதையில் போக்குவரத்து சீரானது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.

Categories

Tech |