கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் இருந்து கிராவல் மணல் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி திருப்பாதிரிபுலியூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சந்தனம் என்பது ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் வண்டிபாளையம் சாலையில் இருக்கும் வளைவில் லாரி திரும்ப முடிந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சந்தானம் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.