Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய டிரைவர்…. ஸ்தம்பித்த போக்குவரத்து….!!!!

கர்நாடக மாநிலம் ஹனூரிலிருந்து கரும்புபாரம் ஏற்றிக்கொண்டு ஈரோடு சத்தியமங்கலத்துக்கு லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம் பாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (47) என்பவர் ஓட்டிவந்தார். இதையடுத்து அந்தியூரை அடுத்த தட்டக்கரை அருகில் வந்தபோது லாரி எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ரவிச் சந்திரன் காயம் இன்றி உயிர்தப்பினார். இது தொடர்பாக தகவல் அறிந்ததும் பர்கூர் காவல்துறையினர் சம்பவ இடதிற்கு விரைந்து சென்று லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதனை தொடர்ந்து வாகன போக்குவரத்து துவங்கியது. இச்சம்பவம் காரணமாக பர்கூர் மலைப் பகுதியில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Categories

Tech |