Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த டிப்பர் லாரி…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. போலீசாரின் நடவடிக்கை…!!!

விபத்துக்குள்ளான டிப்பர் லாரியை போலீசார் மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்திலிருந்து கட்டிடக்கழிவுகளை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி சமுத்திராபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ராமு என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நத்தம் பேருந்து நிலையம் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த கழிவு நீர் ஓடையில் மோதி கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ராமு உட்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லான் எந்திரம் மூலம் டிப்பர் லாரியை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |