Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மாங்காய் லோடு ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தேவசமுதிரம் மேம்பாலம் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிஸ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பிவிட்டார்.

இதனை அடுத்து வேனிலிருந்து சாலையில் கொட்டிய மாங்காய்களை சிலர் பைகளில் எடுத்து சென்றனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |