திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அப்போது வனவிலங்குகள் நகர் பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் கான்வென்ட் ரோடு, டெப்போ ஆகிய பகுதியில் நேற்று முன்தினம் நுழைந்த காட்டெருமை அங்கும் இங்கும் உலா வந்ததால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதனையடுத்து சாலையின் நடுவே தேங்கி இருந்த தண்ணீரை குடித்து தாகம் தீர்த்த காட்டெருமை சிறிது நேரம் கழித்து வனப்பகுதிக்குள் சென்றது. எனவே நகர் பகுதியில் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.