கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நேற்று இரவு அரல்வாய்மொழி, சாமிதோப்பு, மார்த்தாண்டம், குளச்சல், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனை அடுத்து பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் மழை நீர் சுமார் 2 அடி அளவுக்கு தேங்கி வடிந்ததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். சில இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஓடியது.
Categories
சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…!!!
