Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சார் இது ரோட்டில் கிடந்துச்சு…. சாலையில் அறுந்து விழுந்த 1 1/2 பவுன் தங்க சங்கிலி….. வாலிபருக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்…..!!!!

சாலையில் கிடந்த சங்கிலியை  காவல்துறையினரிடம் ஒப்படைத்த வாலிபரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரகோட்டை பகுதியில் அருள்செல்வம்-நந்தினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 24-ஆம் தேதி கேக் வாங்குவதற்காக மன்னார்குடி காந்தி சாலையில் அமைந்துள்ள ஒரு பேக்கரிக்கு சென்றுள்ளனர். பின்னர் கேக் வாங்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அப்போது நந்தினியின் கழுத்தில் கிடந்த 1 1/2 பவுன் தங்க சங்கிலி சாலையில் அறுந்து விழுந்துள்ளது.ஆனால் அவர்கள் இதை பார்க்காமல் சென்று விட்டனர்.

இந்நிலையில் அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வரும் பிரசன்னா என்பவர் அவ்வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையில் கிடந்த தங்க சங்கிலியை  எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து அருள்செல்வம் மற்றும் அவரது மனைவி நந்தினி ஆகிய 2 பேரும்  காவல் நிலையத்திற்கு வந்து சங்கிலியை  வாங்கி செல்லுமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்கள்  காவல் நிலையத்திற்கு வந்து தங்களது சங்கலியை வாங்கியுள்ளனர். மேலும் சங்கிலியை  பத்திரமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த பிரசன்னாவிற்கு கண்ணீர் மல்க நன்றி கூறியுள்ளனர்.

Categories

Tech |