சார்பட்டா பரம்பரை படத்தின் இயக்குனர் மற்றும் படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி அமேசான் தளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. பாக்ஸிங் டே மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சார்பட்டாவில் பாக்ஸிங் வீரராக ஆர்யா, பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், பிரதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வடசென்னையில் எண்பதுகளில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை பற்றி அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் தங்களது கதாபாத்திரங்களில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாக படக்குழுவினர் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் ‘சார்பட்டா பரம்பரை’ இதுவரை சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது. வடசென்னை மக்களின் வாழ்வியலைத் திரை அனுபவமாக மாற்ற இயக்குநரும், நடிகர்களும், ஒட்டுமொத்தப் படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்பட வைக்கிறது! வாழ்த்துகள்!! அற்புதமான பணி” என குறிப்பிட்டுள்ளார்.