பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘சார்பட்டா பரம்பரை’ அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. படத்தில், சார்பட்டா பரம்பரை பாக்ஸிங் குழுவினர் திமுகவினராகவும் நெருக்கடி நிலைக்குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், படத்தைப் பார்த்த உதயநிதி ஸ்டாலின், ”70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்துள்ள ’சார்பட்டா பரம்பரை’ முக்கியமான திரைப்படம். அந்த காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும், அதை கழகம் – கலைஞர் – கழக தலைவர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது என கூறிஉள்ளார்.