மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொண்டாநகரம் கிராமத்தில் டேனியல் ஆசீர்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை டேனியல் தனது வீட்டு வளாகத்தில் மின்சார ஸ்கூட்டருக்கு சார்ஜ் ஏற்றி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததை பார்த்து டேனியல் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் டானியல் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தார். ஆனால் அவரால் தீயை அணைக்க முடியவில்லை.
இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்கூட்டரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டர் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.