நாட்டின் மிகப்பெரிய மற்றும் நம்பர் ஒன் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் 125 சிசி செக்மென்ட் ஸ்கூட்டரான ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது இரண்டுவிதமான ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பேசிக் மாடல் ஸ்கூட்டர் 69, 900 ரூபாய் தொடங்கி இதன் டாப் வேரியண்ட் மாடல் ஸ்கூட்டர் 125 XTEC79,990 ரூபாய் (எக்ஸ் ஷோரூம்)விலையில் உள்ளது.
இதில் குரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட புதிய லுக் மற்றும் ஸ்டைல் உள்ளது. இதன் முன்பக்கம் LED ஹெட் லேம்ப் வசதி உள்ளது. இந்த ஸ்கூட்டரில் கிரோம் பினிஷ் செய்யப்பட்ட மிரர் வசதி, புதிய சீட் பேக் ரெஸ்ட், கிரோம் மப்ளர், கிரோம் ஹாண்டில் பார் எண்டு, புதிய மாற்று பழைய ரெட்ரோ டிசைன் உள்ளது. டெலெஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் வசதி உள்ளது. மேலும் ஏழு கலர்களில் கிடைக்கிறது. புதிய பிளாக், பிளாக் கிரம், சில்வர் உள்ளிட்ட 7 கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மொபைல் சார்ஜிங் செய்யும் வசதி உள்ளது. அது மட்டுமில்லாமல் புளுடூத் வசதியும் உள்ளது.