வேலூர் மாவட்டத்தில் உள்ள சின்னஅல்லாபுரம், அம்பேத்கர் நகரில் செந்தில்-பானுமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினரின் மகன் கோபிநாத் (9) ஆவார். இதில் செந்தில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையின் எதிரேயுள்ள பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் செந்தில் அப்பகுதியில் ஸ்டூடியோ வை த்துள்ளார். அதன்பின் கோபிநாத் கிருஷ்ணகிரியிலுள்ள பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இப்போது கோடை விடுமுறை என்பதால் பானுமதி, கோபிநாத் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன் வேலூரிலுள்ள சொந்த வீட்டிற்கு வந்தனர்.
இந்நிலையில் நேற்றுமாலை பானுமதி செல்போனுக்கு சார்ஜர் போட்டுஇருகிறார். அப்போது குளித்துவிட்டு வந்த கோபிநாத் ஈரக்கையுடன் செல்போனை சார்ஜரிலிருந்து கழற்றி உள்ளார். இந்த நிலையில் எதிர்பாராத வகையில் கோபிநாத் மீது மின்சாரம் பாய்ந்து அலறியபடி சம்பவ இடத்தில் மயங்கி சரிந்து விழுந்தான். அதன்பின் கோபிநாத் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த பானுமதி மற்றும் குடும்பத்தினர் உடனே அவரை சிகிச்சைக்காக வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு கோபிநாத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதனை தொடர்ந்து கோபிநாத் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக பாகாயம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு சார்ஜரிலிருந்து செல்போனை கழற்றியபோது மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.