தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவருக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள் வருகின்றன. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கார்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. இப்படத்தில் சாய் பல்லவி நடிப்புக்கு பாராட்டுக்களும் குவிந்தது. இவர் கமர்சியல் படங்கள், கதாநாயகனுடன் டூயட் ஆடும் படங்கள் இல்லாமல் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து கனமான கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். அதே நேரத்தில் குடும்ப பாங்கான கதாபாத்தில் நடித்துவரும் சாய்பல்லவி கிளாமருக்கு நோ சொல்லிவிடுகிறார்.
இந்நிலையில் பான் இந்தியா படமாக ஹிட் அடித்த புஷ்பா 2 படத்தில் சாய் பல்லவி பழங்குடியின பெண்ணாக நடிக்க உள்ளதாக இணையதளத்தில் தீயாக பரவி வந்தது. கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா, பகத் பாசில் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் கலக்கிய படம் புஷ்பா. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் தான் முக்கிய கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளதாகவும் சில தினங்கள் நாங்கள் செய்திகள் பரவி வந்த நிலையில் இந்த தகவலை பட குழுவினர் முற்றிலுமாக மறுத்துள்ளனர். மேலும் சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற 22 ஆம் தேதி புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர்.