‘லவ் ஸ்டோரி’ படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மலையாளத் திரையுலகில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து பிரபலமடைந்தவர் சாய் பல்லவி. தற்போது இவர் தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள லவ் ஸ்டோரி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஹைதராபாத்தில் லவ் ஸ்டோரி படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் பிரபல நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது பேசிய சிரஞ்சீவி ‘நல்லவேளை சாய்பல்லவி போலா ஷங்கர் படத்தில் நடிக்கவில்லை. அவருக்கு அண்ணனாக நடிக்க எனக்கு விருப்பமில்லை. அவருடன் ஜோடியாக நடித்து டூயட் பாட விரும்புகிறேன்’ என வேடிக்கையாக கூறியுள்ளார். வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா ஷங்கர் படத்தில் முதலில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்க சாய் பல்லவியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் சாய்பல்லவி நடிக்க மறுத்துவிட்டதால், அவருக்கு பதில் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .