Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாம்பாரில் கிடந்த கரப்பான்பூச்சி…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. பரபரப்பு சம்பவம்…!!

சாம்பாரில் கரப்பான் பூச்சி கிடந்ததால் ஹோட்டல் உரிமையாளருக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

ராமேஸ்வரம் கோவிலுக்கு கும்பகோணத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் குடும்பத்துடன் சென்றுள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் கோவிலின் வடக்கு ராத வீதியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் காலை உணவு சாப்பிட சென்றுள்ளார். அப்போது சாம்பாரில் கரப்பான் பூச்சி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன் உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஹோட்டலில் ஆய்வு செய்தனர்.

அப்போது பல்வேறு இடங்களில் கரப்பான் பூச்சி இருப்பதை பார்த்தனர். இதனை அடுத்து உணவு பொருட்களில் கரப்பான் பூச்சிகள் இல்லாத அளவிற்கு தூய்மையாக சமையல் செய்ய வேண்டும். இல்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு அதிகாரிகள் 3000 ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |