Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“சாம்பாரில் கடைசியாக இதைச் சேர்த்தால் சுவை அதிகமாகும்”…. சமையலுக்கான சூப்பர் டிப்ஸ்…!!

சமையல் சம்பந்தமான சில டிப்ஸ்களை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்கிறோம்.

கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது

காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சின்னு இருக்கும்.

மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரை கிழே ஊற்றி விட்டு பிளேடை கழற்றினால் எளிதில் கழற்றலாம்.

இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்

Categories

Tech |