Categories
தேசிய செய்திகள்

சாமானியர்களுக்கான அஞ்சலக சூப்பர் திட்டம்…. குறைந்த முதலீட்டில் அதிக லாபம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக அஞ்சலகங்களில் பல காப்பீடு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படி அஞ்சலகத்தில் கிடைக்கும் சிறந்த காப்பீடு திட்டங்களில் ஒன்றுதான் கிராமப்புற அஞ்சலக லைஃப் இன்சூரன்ஸ் திட்டம். இந்தத் திட்டத்தில் 19 வயது முதல் 45 வயது வரை கணக்கு தொடங்கலாம். 15 ஆண்டுகள் அல்லது 20 ஆண்டுகள் என இரண்டு வகையான திட்டங்கள் இதில் வழங்கப்படுகின்றன. 15 வருடங்கள் திட்டத்தில் 6,9,12 ஆண்டுகள் காலகட்டத்தில் மொத்த உத்தரவாத தொகையில் 20% பெற்றுக் கொள்ளலாம்.

20 ஆண்டுகள் திட்டத்தில் 8,12,16ஆண்டுகளில் 20 சதவீதம் தொகையையும் முதிர்வு காலத்தில் 40 சதவீதம் தொகையையும் பெற்றுக் கொள்ளலாம். 20 ஆண்டுகால பாடிசுத் திட்டத்தில் தினமும் 95 ரூபாய் ஒதுக்கினால் மாதம் தோறும் 2850 செலுத்த வேண்டி இருக்கும்.இதன் மூலமாக வருடத்திற்கு 17,100 செலுத்தும் போது 20 வருடங்கள் பாலிசி முதிர்வாக உங்களுக்கு 14 லட்சம் ரூபாய் கிடைக்கும்.சாமானிய மக்களுக்கு குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் திட்டமாக இந்த திட்டம் கருதப்படுகிறது.

Categories

Tech |