சாத்தன்குளம் வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை..
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தனர்.. இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வரும் நிலையில், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட 9 பேர் மீது சிபிஐ தரப்பில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது..
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சாத்தான்குளம் தந்தை- மகன் இறந்த வழக்கில் நீதிமன்றம் ஆறு மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் 6 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க இயலவில்லை. எனவே வழக்கு விசாரணை முடிக்க மேலும் கால அவகாசம் வழங்கி உத்திரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை 5 மாதத்திற்குள் கூடுதல் அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நீதிபதி முரளி சங்கர் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் எத்தனை சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன? என்று உயர் நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பி உள்ளது. எத்தனை சாட்சியங்கள் விசாரிக்கப்பட உள்ளன? எவ்வளவு நாள் கால அவகாசம் தேவை? என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பிள்ளது.
இதற்கு சிபிஐ தரப்பில் 105 சாட்சியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுவரை 40 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளது என்று சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது.. கூடுதல் குற்றப்பத்திரிக்கை கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று சிபிஐ கோரிக்கை வைத்தது. இதையடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை..