சாத்தான்குளம் வழக்கில் தேடப்பட்டு வரும் காவலார் முத்துராஜ் சரணடைய உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது கூடுதல் விவரங்களை எமது செய்தியாளர் கோமதி சங்கர் இடம் கேட்கலாம்:
சாத்தான்குளம் தந்தை-மகன் வெளியிடும் மரணமடைந்த விவகாரத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் சம்மந்தப்பட்ட காவலர் முத்துராஜ் மட்டும் கைது செய்ய முடியவில்லை. ஆனால் நேற்று முன்தினம் கோவில்பட்டி பகுதிக்கு காவலர் முத்துராஜ் வந்து சென்றதாக செல்போன் சிக்னல் கிடைத்தது.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமறைவான காவலர் முத்துராஜின் உறவினர் வீடுகளுக்கு சென்று விசாரிக்கையில் முத்துராஜ்க்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, எங்களை முத்துராஜ் தொடர்ப்பு கொள்ளவில்லை. முத்துராஜ் எங்க வீட்டுக்கு வரவும் இல்லை போன்ல பேசவும் இல்லை என்று தெரிவித்தனரர். இதையெடுத்து தற்போது அவர் கோவில்பட்டி நீதிமன்றத்தில் சரணடைய இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.