Categories
மாநில செய்திகள்

“சாதி, மதம் கிடையாது”…. தனது மகளுக்கு ‘NO CASTE’ சான்றிதழ் வாங்கிய தம்பதி…..!!!!

இந்தியாவில் சாதி சான்றிதழ் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் கல்வி உதவி தொகை, வேலைவாய்ப்பு, அரசு நலத்திட்டங்கள் பெறுவதற்கு என பலவற்றுக்கும் சாதி சான்றிதழ் தேவை. குழந்தை பிறந்தவுடனே பெற்றோர்கள் ஜாதி சான்றிதழ்களை வாங்கி வைத்து விடுவார்கள். இந்நிலையில் கோவையை சேர்ந்த பெற்றோர் தங்களின் மூன்றரை வயது குழந்தைக்கு சாதி, மதம் இல்லாமல் சான்றிதழ் பெற்றுள்ளனர். இது அனைவரது மத்தியிலும் கவனத்தைப் பெற்றுள்ளது. கோவையை சேர்ந்த நரேஷ் கார்த்திக் என்பவர் தனது மகளை பள்ளியில் சேர்க்க சென்றபோது சாதி சான்றிதழில் அவர்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதை குறிப்பிடவில்லை.

இதனால் இவரால் மகளை பள்ளியில் சேர்க்க முடியாமல் போனது. இதையடுத்து கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் தனது மகளுக்கு ஜாதி மதம் இல்லாமல் சான்றிதழ் கொடுக்க வேண்டும் என விண்ணப்பித்துள்ளனர். தாசில்தார் இந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு ஜாதி மதம் குறிப்பிடாமல் சான்றிதழ் வழங்கியுள்ளார். இது குறித்து தெரிவிக்கையில் 1973-ஆம் ஆண்டு தமிழக அரசு பள்ளியில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை ஜாதி மதம் குறிப்பிடவேண்டிய இல்லை என்று அரசாணை பிறப்பித்துள்ளது. இருப்பினும் உதவித்தொகை உள்ளிட்ட காரணங்களுக்காக ஜாதி சான்றிதழ் வேண்டும் என்று கூறுகிறார்கள். ஜாதி, மதம் ஒழிந்தால் மட்டுமே மக்களிடம் ஏற்றத்தாழ்வுகள் நீங்கும். இதனால் எனது மகளுக்கு ஜாதி மதம் இல்லாத சான்றிதழ் வாங்க வேண்டும் என்று முடிவு செய்து சான்றிதழ் பெற்றுள்ளேன். வேலைக்காக விண்ணப்பிக்கும் போது நோ காஸ்ட் என்ற பிரிவையும் சேர்க்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Categories

Tech |