Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்…. கலெக்டரிடம் மனு அளித்த மாணவ, மாணவிகள்..!!

நிரந்தர சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மாணவர்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று  பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் ஷேக் அயூப், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் நல அலுவலர் சரசுவதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் சேரன்மாதேவி அருகில் புதுக்குடி இந்திரா காலனியில் வசித்து வந்த மாரிமுத்து என்பவர் தலைமையில் பள்ளிக்கூட மாணவ மாணவிகள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, நாங்கள் இந்து காட்டுநாயக்கன் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்கள். எங்கள் சமுதாய குழந்தைகள் மேற்படிப்பை தொடர்வதற்கு அரசு உதவி தொகைகள் மற்றும் இட ஒதுக்கீடு பெறுவதற்கு சாதி சான்றிதழ் தேவைப்படுகிறது. எனவே எங்களுக்கு நிரந்தரமாக சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

இதேபோன்று கோனார் தேசிய பேரவை தாய்நாடு மக்கள் கட்சி இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் மாடசாமி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் பாளையங்கோட்டை அருகில் சிவலபேரி சுடலை மாட சுவாமி கோயில் தலைமை பூசாரியாக இருந்த சிதம்பர துரை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவிக்கு அரசு துறையில் பணி வழங்குவதுடன், இரண்டு பெண் குழந்தைகளுக்கு கல்வி நிதி உதவி வழங்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார் இதேபோன்று 300- க்கும் அதிகமான மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |