Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சாதத்திற்கு ஏற்ற ரசம்…மிக சுவையாக…செய்வது எப்படி?

முருங்கைக்காய் ரசம் செய்ய தேவையான பொருள்கள்:

துவரம்பருப்பு                                           – கால் கப்
முருங்கைக்காய்                                             – 1 (நறுக்கியது )
தேங்காய் துருவல்                                 – 1 டீஸ்பூன்  ( நறுக்கியது )
தக்காளி                                                        – 1
கொத்தமல்லி தழை                                 –  சிறிது
கருவேப்பிலை                                           –  சிறிது
உப்பு                                                                   –  தேவையான அளவு
சீரகம்                                                                  –  அரை டீஸ்பூன்                                                                                    மல்லி                                                                    –  1 டிஸ்பூன்
வர மிளகாய்                                                      –   2
புளி                                                              –  சிறியளவு
மிளகு                                                           –   அரை டீஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் துவரம்பருப்பு, மஞ்சள்பொடி 2 கப், தண்ணீர், நறுக்கிய முருங்கைக்காய் சேர்த்து வேகவிடவும். மிளகு, சீரகம், மல்லி, பூண்டு தட்டி தனியாக எடுத்து வைக்கவும் .

முருங்கைக்காய் துண்டுகளில் உள்ள சதையை மட்டும் எடுத்து வேக வைக்கவும். தக்காளியை, புளியுடன் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

அடுப்பில் வானொலியை வைத்து  சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, வரமிளகாய், தேங்காய்த் துருவல்ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.

அதனுடன் கரைத்த புளி, தக்காளியை சேர்த்தது 5 நிமிடம் கொதித்ததும் தட்டி வைத்திருக்கும் ரசப்பொடி, வேகவைத்த பருப்பு, தண்ணீர், முருங்கைக்காய் துண்டுகளையும் சேர்த்து நன்றாக 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

இறுதியில் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான முருங்கைக்காய் ரசம் தயார்.

Categories

Tech |