விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் இறுதியாக வெளியான பீஸ்ட் படம் பல கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படம் நல்ல வசூல் பெற்றிருந்தது. இதனை அடுத்து வாரிசு படத்தின் படம் படிப்பு தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது இதற்கிடையில் விஜயின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது அதோடு மட்டுமல்லாமல் அவர் குறித்த பிரபலங்களின் பேச்சுகளும், பேட்டிகளும் வை வருகிறது. அந்தவகையில் நடிகர் விஜய்யை ஸ்டண்ட் கலைஞரும். நடிகருமான கிருஷ்ணன் பாராட்டி பேசியுள்ளார்.
பேட்டி ஒன்றில், “சினிமாவில் ஸ்டண்ட் கலைஞர்களை, சில நடிகர்கள் ஒரு பொருட்டாகவே பார்க்கமாட்டார்கள். ஆனால், நடிகர் விஜய் அப்படி கிடையாது. எங்களைப் பற்றி மற்றவர்களிடம் மிகவும் பெருமையாக பேசுவார். அவரை சாகும் வரை நான் மறக்கமாட்டேன்” என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசியுள்ளார். கிருஷ்ணன் ‘கலகலப்பு’, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.