சஹாரா பாலைவனத்தின் மையப்பகுதியில் மற்றும் எப்பொழுதுமே வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 80 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அந்த இடத்தில் அதிக அளவில் காற்றடிக்கும் சமயத்தில் யாராவது சென்றார்கள் என்றால் சூடான மணலும், காற்றும் சேர்ந்து மனிதன் உடலில் உள்ள தோலை உரித்து எடுக்கும் அளவிற்கு மிகவும் ஆபத்தானது. இந்த பாலைவனத்தில் யாராவது மாட்டிக் கொண்டால் அவர்கள் தப்பிப்பதற்கு வாய்ப்பே கிடையாது என்று கூறுகிறார்கள். ஆனால் அதிலிருந்து மொரா க்ராஸ்பரி என்ற நபர் தப்பித்து வந்துள்ளார். அதை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.
மொரோக்கோ என்ற இடத்தில் கடினமான ஒரு ஓட்டப் பந்தயம் நடக்கின்றது. அந்த ஓட்டப்பந்தயத்தில் பலரும் கலந்துகொண்டு ஓடினர். அதாவது இந்த சாரா பாலைவனத்தில் 250 கிலோமீட்டர் கடந்து வரவேண்டும் என்பதுதான் அந்த பந்தயம். பலரும் இதில் கலந்து கொண்டு ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென்று மணல் புயல் அடிக்கத்தொடங்கியது. மணல் புயலடித்த காரணத்தினால் பலரும் போட்டியிலிருந்து பின்வாங்கி விட்டனர். ஆனால் மொரா என்ற நபர் தன்னிடம் இருந்த துணிகள் அனைத்தையும் வைத்து தன்னை மறைத்துக் கொண்டு அந்த மணலில் ஓட ஆரம்பித்தார். இதற்குப்பிறகு புயல் நின்றது இரவுமானது அடுத்தநாள் கண்விழித்து பார்க்கும் பொழுது அவர் எங்கு இருக்கிறார் என்பது அவருக்கே தெரியவில்லை.
ஆனாலும் அவர் தன்னுடைய முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தார். கிடைக்கும் விலங்குகளின் ரத்தத்தை சாப்பிட்டு வாழ்ந்து கடைசியாக பாலைவனத்தின் முடிவில் இருந்த ஒரு கிராமத்திற்கு வந்தடைந்தார். அங்கிருந்த அனைவரும் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு மனிதன் விடாமுயற்சியுடன் ஒரு செயலை செய்ய வேண்டும் என்று இறங்கினால் கட்டாயம் அதில் வெற்றி கிடைக்கும் என்பது தான் இந்த நபரின் கதையிலிருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம்.