சவுதி அரேபியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை எட்டியுள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை கூறியுள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் சவுதி அரேபியா 13வது இடத்தில் இருக்கின்றது.
இந்த நிலையில் சவுதி அரேபியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,409 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்நாட்டில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 3,01,023 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 34 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 3,470 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதார துறை கூறியுள்ளது.