Categories
உலக செய்திகள்

சவுதி அரேபியாவில் உம்ரா யாத்திரை மேற்கொள்ள அனுமதி ….!!

சவுதி அரேபியாவில் கொரானா வைரஸ் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ள நிலையில் உள்நாட்டு நெருக்கம் மட்டும் உம்ரா யாத்திரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உம்ரா யாத்திரை என்பது மெக்கா மதினாவிற்கு இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் புனித யாத்திரை ஆகும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் உம்ரா யாத்திரை மேற்கொள்ள சவுதி அரசு தடை விதித்தது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக உள்நாட்டு மக்கள் உம்ரா யாத்திரை மேற்கொள்ள சவுதி அரேபியா அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து மெக்காவில் உள்ள கிரான் மசூதியில் உம்ரா யாத்திரை இஸ்லாமியர்கள் நிறைவேற்றி வருகின்றனர்.

மெக்காவில் குவிய தொடங்கியிருக்கும் உள்நாட்டு யாத்தியர்களுக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை சவுதி அரசு செய்திருக்கிறது. ஆண்களும், பெண்களும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து உம்ரா யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். பல்வேறு இடங்களில் உடல் வெப்பத்தை அளவிடும் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு மெக்கா மசூதிக்குள் 6000 யாத்திரைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

Categories

Tech |