Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சவுகார்பேட் கொலை வழக்கு – சென்னை கொண்டுவரப்பட்ட குற்றவாளிகள்

சென்னை யானைக்கவுனியில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயமாலா, விலாஸ் மற்றும் ராஜசண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர் .

சென்னை யானைக்கவுனியில் தொழில் அதிபர் சீத்தல்குமார் அவரது பெற்றோர் ஆகியோர் கடந்த 11-ஆம் தேதி அன்று சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.  இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே ரவீந்திரநாத் கைலாஸ் விஜய்யுத்தம் ஆகியோர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவல் விசாரணையில் உள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சீத்தல்குமாரின் மனைவி ஜெயமாலா அவர்களுடைய சகோதரர்களான விலாஸ் மற்றும் ரஜோசன்டே உள்ளிட்ட மூன்று பேரை ஆக்ராவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மூவரும் நேற்று காலை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். ஏற்கனவே ஆக்ராவில் வைத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் செய்து விட்டதால் நேற்று நேரடியாகக் ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

Categories

Tech |