Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சவால்..! இது என்னோட ஆடுகளம்…. “என் பந்தை சமாளிப்பது கஷ்டம்”….. இந்திய பேட்டர்களை எச்சரித்த பாக் பவுலர்..!!

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூஃப் இந்திய பேட்டர்களுக்கு எப்படி பந்து வீசுவது என்பது குறித்து ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இந்த ஆண்டு 3ஆவது முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற 2022 ஆசிய கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் தலா 2 முறை மோதியது. மேலும் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றன. இந்த 2 போட்டியுமே  ஒரு நல்ல போட்டியாக இருந்தது, இதையடுத்து அக்டோபர் 23 அன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் டி20 உலகக் கோப்பை 2022 இல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளது.. இந்த மோதலுக்கு ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் மெல்போர்னில் (MCG) நிறைய கிரிக்கெட் விளையாடிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூஃப், இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் இந்திய பேட்டர்களுக்கு எப்படி பந்து வீசுவது என்பது குறித்து ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியின் முடிவில் ஹரீஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடைசி ஓவர் த்ரில்லில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் எப்போதுமே கடினமான போட்டியாகவே இருக்கும் என்றார்.

கடந்த ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக உயர் அழுத்த சூழலில் விளையாடியதை அவர் நினைவு கூர்ந்தார். 2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக இருந்ததைப் போல இப்போது தனக்கு அழுத்தம் இல்லை. ஆசிய கோப்பையில் கடந்த இரண்டு போட்டிகளில், நான் அதை அதிகம் உணரவில்லை, ஏனென்றால் நான் எனது சிறந்ததை வழங்க வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்று கூறினார்.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூஃப் மேலும் கூறுகையில், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக நான் விளையாடுகிறேன். மெல்போர்ன் மைதானத்தில் பலமுறை விளையாடியதால், இந்தியாவை விட கூடுதல் நன்மை கிடைக்கும். அந்த மைதானத்தில் பல போட்டிகளில் விளையாடியுள்ளேன். “நான் எனது சிறந்ததைச் செய்தால், அவர்களால் என்னை எளிதாக சமாளிக்க முடியாது. வரவிருக்கும் உலகக் கோப்பை போட்டியில், நான்’ மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இருப்பதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பிபிஎல் கிரிக்கெட்டில் இது எனது சொந்த மைதானம், ஏனெனில் நான் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடுகிறேன், அங்குள்ள சூழ்நிலைகள் எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியும். இந்தியாவுக்கு எதிராக நான் எப்படி பந்து வீசுவேன் என்று ஏற்கனவே திட்டமிட ஆரம்பித்துவிட்டேன் என்று கூறினார்.

Categories

Tech |