அமெரிக்க நாட்டில் எழுத்தாளா் சல்மான்ருஷ்டி (75) மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தங்களுக்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லை என்று ஈரான் அரசு அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். அதாவது, சல்மான்ருஷ்டி மீதான தாக்குதல் தொடர்பாக ஈரான் தரப்பில் முதன் முறையாக விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஈரான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், இன்று செய்தியாளர் சந்திப்பில் இதை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சல்மான் ருஷ்டி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவரையும், அவரது ஆதரவாளர்களையும் தவிர்த்து வேறு யாரையும் குற்றம் சாட்டுவது சரியல்ல. அதுமட்டுமல்லாமல் இந்த விவகாரத்தில் ஈரான் மீது குற்றம்சாட்டுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.