Categories
இந்திய சினிமா சினிமா

சல்மான் கான் ஒரு வெறி பிடித்த மிருகம்….. முன்னாள் காதலி பகீர் குற்றச்சாட்டு….!!!!

ஹிந்தி சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருப்பவர் சல்மான் கான். இவருக்கு 56 வயதான நிலையில் தற்போது வரை யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர் ஜரின் கான், கத்ரீனா, சினேகா உல்லல், டைசி ஷா, லூலியா வந்தூர், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுடன் சல்மான் கான் கிசுகிசுக்கபட்டார். சல்மான் கான் பாகிஸ்தானை சேர்ந்த சோமி அலியுடன் சில வருடங்களுக்கு முன்பு டேட் செய்ததாக கூறப்படுகிறது.

தற்போது முன்னாள் காதலியும் நடிகையுமான சோமி அலி சல்மான் கானை வெறி பிடித்த மிருகம், பெண்களை கொடூரமாக அடிப்பவர் என கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார். அதில், “அவர் பெண்களை துன்புறுத்துபவர். நான் மட்டுமின்றி பலரும் துன்புறுத்தப்பட்டுள்ளோம். அவரை கொண்டாடுவதை நிறுத்துங்கள். உங்களுக்கு எதுவும் தெரியாது” என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அந்தப் பதிவை பதிவிட்ட 24 மணி நேரத்திற்குள் நீக்கியுள்ளார். சோமி அலியின் இந்த செயல் தற்போது பாலிவுட் திரை வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Categories

Tech |