திண்டுக்கல் சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் விடுதலையாகி உள்ளதையொட்டி நம் முடி திருத்துவோர் சங்கம் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குரும்பட்டியில் முடிதிருத்தும் கடை நடத்தும் வெங்கடாசலம்,லட்சுமி தம்பதியரின் 12 வயதான மகள் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் விசாரணை நடத்திய போலீசார் எதிர் வீட்டில் வசிக்கும் கிருபானந்தன் என்பவரை கைது செய்தனர்.சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கிருபானந்தன் மின்சார வயரை சிறுமியின் மூக்கிலும்,வாயிலும் செலுத்தி மின்சாரம் பாய்ச்சி சிறுமியை படுகொலை செய்தார்.
இதை கொலையாளியே காவல்துறையிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.இதனையொட்டி காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து குற்றவாளியை சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி வெளிவந்தது.இதில் சாட்சிகள் கலைக்கப்பட்டு கிருபானந்தன் குற்றம் செய்ததற்கு சாட்சி இல்லை எனக் கூறி விடுதலை செய்யப்பட்டார்.சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததாக மருத்துவ அறிக்கை இருந்தும் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் முடி திருத்துவோர் சங்கம் அறிவித்துள்ளது.