மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது, “நமக்கு அனைத்தையும் விட நமது எரிபொருள் பாதுகாப்பே முக்கியம். எரிபொருள் சலுகை விலையில் கிடைக்கும் போது அதனை நாம் ஏன் வாங்க கூடாது ? தற்போது எரிபொருள்களை ரஷ்யாவிடமிருந்து வாங்க தொடங்கியுள்ளோம். இந்தியாவுக்கு ஒரு சில பேரல்கள் வந்து சேர்ந்துள்ளது. விநியோகம் இன்னும் 3 – 4 நாட்களில் ஆரம்பமாகும். இந்தியாவின் ஒட்டுமொத்த நலனையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு மாதமாக போர் தொடுத்து வரும் நிலையில் அமெரிக்கா அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஆனால் அதனையும் மீறி இந்தியா சலுகை விலையில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய முடிவெடுத்துள்ளது.