பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் சலார் படத்தில் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்க இருக்கிறார்.
யாஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த கே.ஜி.எப் படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் பிரசாந்த் நீல். தற்போது இவர் கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை வைத்து சலார் என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.
https://twitter.com/prashanth_neel/status/1429669730055442436
கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகர் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் மிரட்டலான லுக்கில் ஜெகபதி பாபு இருக்கும் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழில் நடிகர் ஜெகபதி பாபு பைரவா, விஸ்வாசம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.