Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘சலார்’ படத்தில் பிரபாஸுக்கு சகோதரியாக நடிப்பது உண்மையா?… நடிகை ஜோதிகா விளக்கம்…!!!

நடிகை ஜோதிகா சலார் படத்தில் பிரபாஸுக்கு சகோதரியாக நடிக்க இருப்பதாக பரவிய தகவலுக்கு விளக்கமளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகை ஜோதிகா முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். இவர் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இதன்பின் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட ஜோதிகா சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். இதையடுத்து இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார் .

Salaar' Buzz: Jyothika to be seen as Prabhas' sister in the high-octane  actioner? | Telugu Movie News - Times of India

கடைசியாக இவர் நடிப்பில் பொன்மகள் வந்தாள் திரைப்படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது . கடந்த சில நாட்களாக கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் சலார் படத்தில் பிரபாஸுக்கு சகோதரியாக ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில் இதனை நடிகை ஜோதிகா திட்டவட்டமாக மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |