Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சலவை பெட்டி வழங்கும் நிகழ்ச்சி…. கலந்து கொண்ட தொழிலாளர்கள்…. சலவை பெட்டிகளை வழங்கிய தாசில்தார்….!!

இலவச சலவை பெட்டிகள்  வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கரம்பக்குடி பகுதியில் சலவை தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் இலவச சலவை பெட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் முருகேசன், தாசில்தார் விஸ்வநாதன், பேரூராட்சி நிர்வாக அதிகாரி கார்த்திகேயன், பேரூராட்சி துணை தலைவர்,கவுன்சிலர்கள், பொதுமக்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் தாசில்தார் விஸ்வநாதன் நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட 23 சலவை தொழிலாளர்களுக்கு சலவை பெட்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |