ரஜினிகாந்த் இன்று டுவிட்டர் வாயிலாக தன்னுடைய அரசியல் வருகையை மீண்டுமொருமுறை உறுதி செய்திருக்கிறார். குறிப்பாக ஜனவரியில் கட்சி துவக்கம், டிசம்பர் 31இல் அதற்கான தேதி அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நியாயமான, வெளிப்படையான, ஊழலற்ற ஜாதி மதம் சாராத ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம், அற்புதம், அதிசயம், நிகழும் என்று தன்னுடைய டுவிட்டர் மூலமாக ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் இன்னும் சற்று நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளிக்க வைக்க வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. கட்சி தொடங்கப் போவதாக ரஜினி அறிவித்ததால் அவரது ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். தமிழக அரசியலில் திமுக – அதிமுக என்ற இருதுருவ அரசியலுக்கிடையே ரஜினியின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.