நெல்லையில் சைக்கிளின் மீது பைக் மோதியதால் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் தொழிலாளியான தர்மராஜ் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் விஜயநாராயணம் சாலையில் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்தார் மோட்டார் சைக்கிள் திடீரென்று சற்றும் எதிர்பாராத விதமாக தர்மராஜ்ஜினுடைய சைக்கிளின் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த தர்மராஜ்ஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.