தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய ஸ்ரீமதி மரணத்தில் தற்போது பாலியல் பலாத்காரமோ அல்லது கொலையோ ஸ்ரீமதியினுடைய மரணத்திற்கு காரணம் அல்ல என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஸ்ரீமதியினுடைய மரணத்தில் பல்வேறு சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இந்நிலையில் தற்பொழுது ஸ்ரீமதியினுடைய மரணத்திற்கு பாலியல் பலாத்காரமோ கொலையோ காரணம் அல்ல என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
ஸ்ரீமதியினுடைய பெற்றோர் தொடர்ந்து அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டி வர கூடிய நிலையில் உயர்நீதிமன்றம் இதனை தெரிவித்து இருக்கிறது. ஜிப்மர் மருத்துவ அறிக்கை சுட்டிக்காட்டி நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இன்று மாலை ஸ்ரீமதியின் மரணத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கும் நிபந்தனைகளுடன் ஜாமீன் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தற்பொழுது ஸ்ரீமதியின் மரணத்திற்கு காரணம் பாலியல் பலாத்காரமோ அல்லது கொலையோ இல்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.