தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பை தடுக்க ஒரு சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் சந்தைகள், வணிக வளாகங்கள், பொது இடங்களில் 20 சதவீதம், பணியிடங்களில் 18 சதவீதம், பள்ளி கல்லூரிகள் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் 16 சதவீதம் பாதிப்பு உறுதியாகுவதால் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளது. மேலும் கொரோனா அதிகரிக்கும் பட்சத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.