Categories
மாநில செய்திகள்

சற்றுமுன் அதிர்ச்சி…! 13 பேர் உடலை கொண்டு செல்லும் போது விபத்து….!!!!

நீலகிரி – குன்னுர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகர் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ வீரர்களுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.  பின்னர்  ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் வெலிங்டனில் இருந்து சூலூர் கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் 13 பேரின் உடல்களை அமரர் ஊர்தியில் எடுத்துச் செல்லும்போது பாதுகாப்புக்கு சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. நீலகிரி அருகே பார்லியாறில் மலைப்பகுதியில் காவலர் வாகனம் விபத்துக்குள்ளானதில் போலீசார் காயம் அடைந்தனர். மற்ற போலீசார் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் ராணுவ வீரர்களின் உடல்களை ஏற்றிச் சென்ற அமரர் ஊர்தி வாகனம் நிற்காமல் சென்று கொண்டு உள்ளது.

 

Categories

Tech |