ஜீதமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி சர்வைவர் ஆகும். இந்நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கினார். இவற்றில் பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர். கடும் போட்டிகளுக்கு பிறகு நடிகை விஜயலக்ஷ்மி இப்போட்டியை வென்றார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் ஐஸ்வர்யா ஆவார்.
இவர் ஒர்கவுட் Freek என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். அத்துடன் இவர் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இந்த நிலையில் இப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா தன்னுடைய காதலரின் புகைப்படத்தை பதிவுசெய்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தையும் கூறியுள்ளார். இவருடைய இப்பதிவு தற்போது ரசிகர்களால் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.