Categories
தேசிய செய்திகள்

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு..!!!

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போது விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தற்பொழுது தொற்று பரவல் குறைந்த காரணத்தால் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.  எனினும் சர்வதேச விமான போக்குவரத்து இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்நிலையில் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையை அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய விமான போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சரக்கு விமான போக்குவரத்துக்கு மட்டும் எந்த தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |