நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சர்வதேச விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெளிநாட்டு சிறப்பு விமானங்கள் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் 45 நாடுகளுக்கு விமானங்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து டி.ஜி.சி.ஏ எனப்படும் விமான போக்குவரத்து இயக்குனரகம் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததை அடுத்து விமான சேவைகளை மீண்டும் துவங்க முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து ஒமைக்ரான் வைரஸ் பரவ தொடங்கியதால் இந்த முடிவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் சர்வதேச விமான சேவைகளுக்கான தடையை நேற்று முடிவுக்கு கொண்டு வர இருந்தது. ஆனால் இந்த முடிவை டி.ஜி.சி.ஏ விமான போக்குவரத்து இயக்குனரகம் காலவரையின்றி தடையை நீடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சர்வதேச சரக்கு விமான சேவைகளுக்கும், ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் மற்றும் டி.ஜி.சி.ஏ வால் அனுமதிக்கப்பட்ட சிறப்பு விமானங்களுக்கும் எந்த தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.