அமெரிக்காவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சர்வதேச பயணிகளுக்கான ஒரு சில கட்டுப்பாடுகளை அந்த நாடு தொடர்ந்து அமலில் வைத்திருக்கிறது. அந்த வகையில் கொரோனா பாதிப்புள்ள நாடுகளின் நான்கு வகையாகப் பிரித்துள்ள அமெரிக்கா, நிலை நான்கு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு கண்டிப்பாக பயணம் மேற்கொள்ள கூடாது என தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்திருக்கிறது. அதன்படி நிலை 4 பட்டியலில் இருக்கும் பல நாடுகள் நிலை மூன்றிலிருந்து ஒன்றுக்குள் குறைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த தளர்வுகள் சர்வதேச பயணத்தின் பாதுகாப்பு குறித்து அமெரிக்க குடிமக்கள் சிறந்த தகவல் அறிந்த முடிவுகளை எடுக்க உதவும் என நம்புவதாக வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.