Categories
சினிமா தமிழ் சினிமா

சர்வதேச பட விழாவில் மகாமுனி…. 9 விருதுகளுக்கு பரிந்துரை…. வாழ்த்து கூறிய இயக்குனர்…!!

தமிழ் திரைப்படமான மகாமுனி திகில் நிறைந்த கதையாக இயக்குனர் சாந்தகுமார் இயக்கியிருந்தார். ஆர்யா மற்றும் இந்துஜா இனைந்து நடித்த மகாமுனி 2019ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மக்களிடையே அதிகம் வரவேற்பு பெற்றது. சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படத்திற்காக  9 விருதுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதன்படி சிறந்த நடிகருக்காக ஆர்யா, சிறந்த நடிகைக்காக இந்துஜா, துணை நடிகருக்காக  மகிமா நம்பியர் என 9 விருதுகளுக்கு மகாமுனி படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் இந்த சர்வதேச திரைப்பட விழா அடுத்த மாதம் 9 ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விருது பெறும் அனைவருக்கும் இயக்குனர் சாந்தகுமார் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |