Categories
சினிமா தமிழ் சினிமா

சர்வதேச சாதனை படைத்த கர்ணன்…. இதுதான் காரணம்…. கொண்டாடும் ரசிகர்கள்….!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கிய இந்த திரைப்படம் வெளியானது முதல் பல விருதுகளைப் பெற்றதோடு ஏராளமான சாதனைகளையும் படைத்தது. இந்த படத்தில் மலையாள நடிகர் லால் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது கர்ணன் படம் மீண்டும் ஒரு சாதனையை புரிந்துள்ளது.

அதாவது சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் சர்வதேச அளவில் கட்டாயமாக பார்க்க வேண்டிய ஐந்து படங்களின் பட்டியலில் கர்ணன் திரைப்படம் இடம்பிடித்துள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் கர்ணன் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |