இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் நாளைய(31.10.2022) தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் தேசிய ஒருமைப்பாடு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரயில் நிலையங்களின் பிரதான நுழைவு வாயில் முன்பாக வல்லபாய் பட்டேலின் வாழ்க்கை வரலாறு பற்றிய கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் பட்டேல் பற்றிய 50க்கும் மேற்பட்ட படங்களுடன் கூடிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
இதனை சுதந்திர போராட்ட வீரரின் வாரிசு ஆர் எஸ் சண்முகம் திறந்து வைக்கின்றார். இதில் ரயில் நிலைய மேலாளர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். கோவை ரயில் நிலைய பொறுப்பு இயக்குனர் சுரேஷ் முன்னிலை வகித்துள்ளார்.