முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் மதுவிலக்கு துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்து வருகிறார். இந்நிலையில் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு தமிழ்நாடு பார் உரிமையாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் அரசின் விதிகளை பின்பற்றி டாஸ்மாக் பார்களில் டெண்டர் நடப்பதில்லை என குற்றம்சாட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார் உரிமையாளர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூட அமைச்சர் செந்தில் பாலாஜியின் செயல்பாடுகளை முதல்வர் முக.ஸ்டாலின் பெரிதும் பாராட்டினார். கோவை மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக செந்தில் பாலாஜி மாற்றிக் காட்டுவார் என்று நம்பப்பட்டு வரும் நிலையில், அவர் பொறுப்பு வகிக்கும் துறையில் முன்வைக்கப்பட்டுள்ள முறைகேடு புகார்கள் ஸ்டாலினுக்கு அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.