மகாராஷ்டிர மாநிலத்தில் மக்கள் ஆசி யாத்திரை நடைபெற்றபோது கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நாராயணன் ரானே பேசுகையில், “எத்தனையாவது வருடம் சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் என்று முதல்வருக்கு தெரியாதது அவமானமாக இருக்கிறது. அந்த இடத்தில் மட்டும் நான் இருந்திருந்தால் அவரை கன்னத்தில் அறைந்து இருப்பேன் என்று தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாஜக மற்றும் சிவசேனா கட்சியினர் இடயே பெரும் மோதல் நேற்று ஏற்பட்டது. அவருடைய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் சிவசேனா அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு மத்திய மந்திரி நாராயணன் ரானேவை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். அதில் சுமார் 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு நேற்று. இரவு மாஜிஸ்திரேட் ஷைக்காபாபாசோ பாட்டீல் முன் ராணாவை போலீசார் ஆஜர்படுத்தினர் இந்த விசாரணைக்கு பின் ரானேவுக்கு ஜாமின் வழங்கி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.